கோவில் உண்டியல் திருட்டு

கோவில் உண்டியல் திருட்டு போனது.

Update: 2022-11-30 18:59 GMT

கந்தர்வகோட்டை அருகே கொல்லம்பட்டி கிராமத்தில் பட்டவன், செவிட்டு முனீஸ்வரர் கோவில் உள்ளது. நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் பூசாரி ரங்கசாமி கோவிலை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்று விட்டார். நேற்று காலை கோவிலுக்கு வந்த போது கதவு உடைக்கப்பட்டு கிடந்தது. இதையடுத்து அவர் கோவிலுக்கு உள்ேள சென்று பார்த்தபோது, அங்கிருந்த உண்டியலை மர்மநபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து ரங்கசாமி கந்தர்வகோட்டை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்