கோவில் உண்டியல் திருட்டு

பெரியகுளம் அருகே கோவில் உண்டியலை மர்ம நபர்கள் திருடி சென்றனர்.

Update: 2022-11-18 19:00 GMT

பெரியகுளம் அருகே லட்சுமிபுரத்தில் லட்சுமி நாராயண பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் நேற்று முன்தினம் மர்ம நபர்கள் கோவில் கதவின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து உண்டியலை திருடி சென்றனர். இது குறித்து தென்கரை போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது. புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது கோவிலில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் கோவில் உண்டியலை 3 பேர் திருடி செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தது. அதை வைத்து உண்டியலை திருடிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்