கால்நடை ஆஸ்பத்திரியில் அறுவை சிகிச்சை உபகரணங்கள் திருட்டு

ஆடுதுறையில் புதிதாக திறக்கப்பட உள்ள கால்நடை ஆஸ்பத்திரியில் அறுவை சிகிச்சை உபகரணங்கள் திருட்டுப்போனது.

Update: 2023-10-11 20:10 GMT

திருவிடைமருதூர்,

ஆடுதுறையில் புதிதாக திறக்கப்பட உள்ள கால்நடை ஆஸ்பத்திரியில் அறுவை சிகிச்சை உபகரணங்கள் திருட்டுப்போனது.

கால்நடை ஆஸ்பத்திரி

கும்பகோணம் அருகே உள்ள ஆடுதுறை ரயில் நிலையம் அருகில் கால்நடை ஆஸ்பத்திரி இயங்கி வருகிறது. இந்த ஆஸ்பத்திரி கட்டிடம் பெரும்பாலும் சேதமடைந்துள்ளதால் இந்த ஆஸ்பத்திரி அருகிலேயே சுமார் ரூ.40 லட்சம் செலவில் நவீன வசதிகளுடன் ஆஸ்பத்திரி கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டு விரைவில் திறக்கப்பட உள்ளது.பழுதடைந்துள்ள ஆஸ்பத்திரியில் மருத்துவ உபகரணங்கள் வைக்க முடியாத நிலையில் இந்த பொருட்களை பாதுகாக்கும் வகையில் புதிய ஆஸ்பத்திரி கட்டிடத்தில் அறுவை சிகிச்சை உபகரணங்களை வைத்துள்ளனர்.

திருட்டு

கடந்த 2 வாரமாக அவ்வப்போது பொருட்கள் தேவைப்படும்போது கட்டிடத்தை திறந்து பொருட்களை எடுத்து பயன்படுத்தி வந்தனர்.இந்நிலையில் நேற்று காலை மருந்து பொருட்கள் எடுப்பதற்காக கால்நடை உதவி மருத்துவர் ஜானகிப்பிரியா சென்றபோது புதிய கட்டிடத்தின் பின்பக்க கதவில் உள்ள பூட்டு உடைக்கப்பட்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் உள்ளே சென்று பார்த்த போது அங்கு வைக்கப்பட்டிருந்த சுமார் ரூ.50ஆயிரம் மதிப்பிளான கால்நடை அறுவை சிகிச்சை உபகரணங்கள் திருடப்பட்டுள்ளது தெரியவந்தது.இது குறித்து தகவல் அறிந்த ஆடுதுறை பேரூராட்சி தலைவர் ம.க. ஸ்டாலின் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டார்.இது குறித்து திருவிடைமருதூர் போலீசார் விசாரணை நடத்தி கால்நடை ஆஸ்பத்திரியில் அறுவை சிகிச்சை உபகரணங்கள் திருடி சென்ற மர்ம நபர்களை தேடி வருகிறார்கள். 

Tags:    

மேலும் செய்திகள்