ரூ.45 ஆயிரம் பேட்டரிகள் திருட்டு
உக்கடத்தில் ரூ.45 ஆயிரம் பேட்டரிகள் திருட்டு போனது.
உக்கடம்
கோவை தெற்கு உக்கடத்தில் தனியார் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்கு வழக்கம்போல் ஊழியர்கள் பணி முடிந்ததும் நிறுவனத்தை பூட்டி விட்டு சென்றனர். பின்னர் நேற்று முன்தினம் காலை வந்து பார்த்த போது 9 ஆட்டோக்களில் இருந்த பேட்டரிகளை காணவில்லை. மர்ம நபர்கள் அந்த பேட்டரிகளை திருடி சென்றது தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ.45 ஆயிரம் இருக்கும் என்று கூறப்படுகிறது. இதுகுறித்து அந்த நிறுவனத்தின் உதவி மேலாளர் விஜயகுமார் (வயது 42) கோவை பெரியகடை வீதி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இந்தபுகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.