பேன்சி கடையில் ரூ.4லட்சம் பொருட்கள் திருட்டு
பேன்சி கடையில் ரூ.4லட்சம் பொருட்கள் திருட்டு
கணபதி
கோவை கவுண்டம்பாளையத்தைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் (வயது46). இவர் பூசாரிபாளையத்தில் உள்ள பாரதியார் ரோட்டில் பேன்சி கடை வைத்துள்ளார்.
சம்பவத்தன்று இவர், உறவினர் வீட்டில் துக்கம் விசாரிப்பதற்காக கடையினை மூடிவிட்டு சென்று விட்டார்.பின்பு வந்து கடையினை திறந்த போது, கடையின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து அங்கிருந்த ரூ.4 லட்சம் மதிப்புள்ள மரச்சாமான்கள், பேன்சி பொருட்களை மர்ம ஆசாமிகள் திருடிச்சென்றது தெரியவந்தது. இதுகுறித்து பாலசுப்பிரமணியன் சரவணம்பட்டி போலீசில் புகார் அளித்தார்.போலீசார் வழக்குப்பதிவு செய்து அருகில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளைக் கொண்டு ஆசாமிகளை தேடி வருகின்றனர்.