தனியார் மருத்துவமனை ஊழியர் வீட்டில் ரூ.2 லட்சம் திருட்டு

தனியார் மருத்துவமனை ஊழியர் வீட்டில் ரூ.2 லட்சம் திருட்டு நடைபெற்றது.

Update: 2022-09-21 18:45 GMT

பெரம்பலூர் புதிய பஸ் நிலையம் பின்புறம் வெங்கடாஜலபதி நகரில் வாடகை வீட்டில் வசித்து வருபவர் சுந்தரம் (வயது 60). இவர் சிறுவாச்சூரில் உள்ள தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மயக்குனராக பணிபுரிந்து வருகிறார். சுந்தரத்தின் மனைவி மற்றும் பிள்ளைகள் வேலூர் மாவட்டம், குடியாத்தத்தில் வசித்து வருகின்றனர். கடந்த 16-ந் தேதி மதியம் சுந்தரம் வீட்டை பூட்டி விட்டு குடியாத்தத்தில் வசிக்கும் தனது மனைவி, பிள்ளைகளை பார்க்க சென்றார். பின்னர் அங்கிருந்து சுந்தரம் நேற்று மதியம் வீட்டிற்கு வந்து பார்த்த போது முன்பக்க கதவின் தாழ்ப்பாள் உடைக்கப்பட்டிருந்தது. இதையடுத்து அவர் வீட்டிற்குள் சென்று பார்த்த போது பீரோவும் திறந்து கிடந்தது. மேலும் பீரோவில் இருந்த ரூ.1 லட்சத்து 80 ஆயிரம், 2 கிராம் தங்க மோதிரம் ஒன்று, 1 கிராம் தங்க நாணயம் ஒன்று, வெள்ளி அரைஞாண் கொடியும், ஒரு ஜோடி வெள்ளி கொலுசும் திருடு போயிருந்தது. பின்னர் இதுகுறித்து சுந்தரம் பெரம்பலூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் சம்பவ இடத்துக்கு வந்து போலீசார் விசாரணை நடத்தி மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்