செல்போன் கடையில் ரூ.2 லட்சம் திருட்டு

வேப்பூரில் செல்போன் கடையில் ரூ.2 லட்சம் திருடு போனது.

Update: 2023-09-10 18:38 GMT

வேப்பூர், 

வேப்பூர் அருகே உள்ள அரியநாச்சி கிராமத்தை சேர்ந்தவர் ராமச்சந்திரன் மனைவி அனிதா. இவர் வேப்பூர் கூட்டு ரோட்டில் செல்போன் கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் தனது குடும்ப செலவிற்காக தனது நகைகளை வேப்பூரில் உள்ள ஒரு வங்கியில் ரூ.2 லட்சத்துக்கு அடகு வைத்தார். பின்னர் அந்த பணத்தை கடையில் வைத்து விட்டு, உறவினர் ஒருவரின் துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக கடையை பூட்டி விட்டு சென்றார். பின்னர் நேற்று காலையில் கடைக்கு வந்து பார்த்தபோது, கடையில் இருந்த பொருட்கள் அனைத்தும் சிதறிக்கிடந்தன. மேலும் கடையில் வைத்திருந்த ரூ.2 லட்சம் 20 செல்போன்களை காணவில்லை. நேற்று முன்தினம் நள்ளிரவில் கடையின் மேற்கூரையை பிரித்து உள்ளே புகுந்த மர்மநபர்கள் கடையில் இருந்த பணம் மற்றும் செல்போன்களை திருடிச்சென்றிருப்பது தெரியவந்தது. இதுகுறித்து வேப்பூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்