தனியார் நிறுவனத்தில் ரூ.1¾ லட்சம் திருட்டு

நிறுவனத்தின் ஷட்டைரை உடைத்து உள்ளே நுழைந்த மர்ம ஆசாமி ரூ.1 லட்சத்து 80 ஆயிரத்தை திருடிவிட்டு சென்றார்.

Update: 2023-09-10 19:30 GMT

அன்னூர், செப்.11-


கோவையை அடுத்த அன்னூரை சேர்ந்தவர் மோகனபிரியா (வயது 34). இவர் குன்னத்தூராம்பாளையத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் மேலாளராக வேலை பார்த்து வருகிறார்.

இந்த நிறுவனத்தில் 8-ந் தேதி இரவு வரவு, செலவு கணக்குகளை பார்த்து வீட்டு மீதி இருந்த ரூ.1 லட்சத்து 80 ஆயிரத்தை அங்குள்ள டேபிளில் வைத்து விட்டு சென்றனர்.

இந்தநிலையில் நள்ளிரவில் நிறுவனத்தின் ஷட்டைரை உடைத்து உள்ளே நுழைந்த மர்ம ஆசாமி ரூ.1 லட்சத்து 80 ஆயிரத்தை திருடிவிட்டு சென்றார்.

மறுநாள் காலையில் வந்து பார்த்த போது நிறுவனத்தின் பூட்டை உடைத்து பணத்தை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரிய வந்தது.

இது குறித்த புகாரின் பேரில் அன்னூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர்.

அதில் அந்த நிறுவனத்தில் ஒரு மாதத்துக்கு முன்பு காவலாளியாக வேலைக்கு சேர்ந்த கேரள மாநிலம் இடுக்கியை சேர்ந்த மனோஜ் (28) என்பவர் பணத்தை திருடிச்செல்லும் காட்சி பதிவாகி இருந்தது.

இதையடுத்து தலைமறைவான மனோஜை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.


மேலும் செய்திகள்