மோட்டார் சைக்கிள்கள் திருட்டு
நாங்குநேரி அருகே மோட்டார் சைக்கிள்கள் திருடு போயின.
நாங்குநேரி:
மூன்றடைப்பு அருகில் உள்ள பறையன்குளத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 50), ஆழ்வார்நேரியைச் சேர்ந்த பட்டுராஜன். இவர்கள் சம்பவத்தன்று இரவு தங்களுடைய மோட்டார் சைக்கிள்களை, வீட்டின் முன்பு நிறுத்தியிருந்தனர். மறுநாள் காலை பார்த்தபோது மோட்டார் சைக்கிள்களை காணவில்லை. அதனை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. இதுபற்றிய புகாரின் பேரில் மூன்றடைப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.