இருசக்கர வாகனங்கள் பழுது நீக்கும் பட்டறையில் மோட்டார்-கருவிகள் திருட்டு

இருசக்கர வாகனங்கள் பழுது நீக்கும் பட்டறையில் ேமாட்டார்-கருவிகள் திருட்டு போனது.

Update: 2023-06-26 19:00 GMT

பெரம்பலூர்:

பெரம்பலூர் அருகே சிறுவாச்சூர் பால் பண்ணை தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகன் மோகன் (வயது 34). இவர் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சிறுவாச்சூரில் இருசக்கர வாகனங்கள் பழுது பார்க்கும் பட்டறை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் மோகன் பட்டறையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றார். பின்னர் நேற்று காலை அவர் பட்டறையை திறக்க வந்தபோது, பட்டறையின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனடியாக அவர் உள்ளே சென்று பார்த்தபோது பட்டறையில் இருந்த வாட்டர் சர்வீஸ் செய்யும் கம்பிரசர் மோட்டாரும், இருசக்கர வாகனங்களை பழுது நீக்கும் கருவிகள், வாகன ஆயில் ஆகியவையும் திருட்டு போயிருந்தன. இந்த சம்பவம் தொடர்பாக மோகன் பெரம்பலூர் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும் அங்கு விரல் ரேகை நிபுணர்கள் வந்து தடயங்களை சேகரித்தனர். இதற்கிடையே போலீஸ் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு துப்பு துலக்கப்பட்டது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்