சாயல்குடி,
சாயல்குடி அருகே தெற்கு மூக்கையூர் பகுதியில் ஆலயம் உள்ளது.அங்கு பணிபுரியும் கன்னியாஸ்திரிகளுக்காக விடுதி கட்டப்பட்டுள்ளது. சம்பவத்தன்று கன்னியாஸ்திரிகள் ஆலயத்துக்கு சென்றவுடன் மர்ம நபர் அந்த விடுதிக்கு சென்று பீரோவில் இருந்த ரூ.25 ஆயிரத்தை திருடி சென்று விட்டான். பின்னர் ஆலயத்தில் இருந்து திரும்பிய கன்னியாஸ்திரிகள் கதவு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த பணம் திருடு போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து சாயல்குடி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.இது குறித்து சாயல்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயசித்ரா வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.