பேக்கரி கடையில் பணம் திருட்டு

விழுப்புரம் அருகே பேக்கரி கடையில் பணம் திருடப்பட்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2023-06-11 18:45 GMT

விழுப்புரம் அருகே அரியலூர் திருக்கை கிராமத்தை சேர்ந்தவர் முருகன் (வயது 38). இவர் அதே கிராமத்தில் பேக்கரி கடை வைத்துள்ளார். இக்கடையில் பணியாற்றி வரும் ஊழியர்களுக்கு கூலித்தொகை கொடுக்க கடையின் கல்லாப்பெட்டியில் இருந்த டிராயரை பார்த்தபோது அதிலிருந்த ரூ.24 ஆயிரம் காணாமல் போயிருந்ததை அறிந்து அதிர்ச்சியடைந்தார். உடனே கடையில் இருந்த சி.சி.டி.வி. கேமராவை பார்த்தபோது பக்கத்து வீட்டில் வசித்து வரும் நாகராஜ் என்பவரின் மருமகனான கெடார் பள்ளிக்கூட தெருவை சேர்ந்த பிரகாஷ் (35) என்பவர் பலமுறை பணத்தை திருடிச்சென்றுள்ளது தெரியவந்தது.

இதுகுறித்து முருகன் கொடுத்த புகாரின் பேரில் கெடார் போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரகாஷை தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்