மதுக்கூடத்தில் பணம் திருட்டு

மதுக்கூடத்தில் பணத்தை திருடி சென்றனர்.

Update: 2023-01-04 19:09 GMT


விருதுநகர் பி.பி. நந்தவன தெருவை சேர்ந்தவர் கிஷோர் குமார் (வயது 35). இவர் கால்நடை ஆஸ்பத்திரி சாலையில் உள்ள டாஸ்மாக் கடையுடன் இணைந்த மதுக்கூடத்தை நடத்தி வருகிறார். இந்நிலையில் சம்பவத்தன்று இரவு மது கூடத்தை பூட்டிய பிறகு இரவில் யாரோ உள்ளே நுழைந்து அங்கு இருந்த ரூ.700-ஐ திருடிச்சென்றதாக கூறப்படுகிறது. இதுபற்றி கிஷோர்குமார் கொடுத்த புகாரின் பேரில் இந்நகர் கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்