குட்டிப்புலி பட பாணியில் கோவில் உண்டியலில் பணம் திருடியவர் கைது மயிலம் போலீசார் நடவடிக்கை

குட்டிப்புலி பட பாணியில் கோவில் உண்டியலில் பணம் திருடியவரை மயிலம் போலீசார் கைது செய்தனா்.

Update: 2022-10-05 18:45 GMT


மயிலம், 

மயிலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஞானசேகர் தலைமையிலான போலீசார் ஜக்காம்பேட்டை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அங்கு கோர்ட்டு அருகே இருக்கும், அய்யனாரப்பன் கோவிலில் உள்ள உண்டியல் அருகே, சந்தேகப்படும்படியாக ஒருவர் நின்று கொண்டிருந்தார். அவரை போலீசார் பிடிக்க முற்பட்ட போது ,அங்கிருந்து அவர் தப்பி ஓடினார்.

இருப்பினும் போலீசார், துரத்தி சென்று அந்த நபரை மடக்கி பிடித்தனர். விசாரணையில், பெரியதச்சூர் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த கந்தசாமி மகன் ராஜி (வயது 29), என்பதும், குட்டிப்புலி பட பாணியில், ஒரு குச்சியில் 'பபுள்கம்' வைத்து, அதன் மூலம் கோவில் உண்டியலில் இருந்து பணத்தை திருடியது தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜியை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்