நாங்குநேரி:
நாங்குநேரி அருகே மறுகால்குறிச்சியில் புது அம்மன் கோவில் உள்ளது. நேற்று முன்தினம் இரவு கோவில் பூசாரி சுடலை (வயது 47) பூஜையை முடித்துவிட்டு வீடு திரும்பினார். நேற்று காலை கோவிலுக்கு சென்ற போது அங்கிருந்த உண்டியல் பூட்டை யாரோ மர்ம நபர் உடைத்து, அதில் இருந்த பணத்தை திருடிச் சென்றனர்.
இதுகுறித்து கோவில் தர்மகர்த்தா திருமேடை பெருமாள் நாங்குநேரி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.