கோவில் உண்டியல் பணம் திருட்டு
அருப்புக்கோட்டை அருகே கோவில் உண்டியலை உடைத்து பணத்தை கொள்ளையடித்த மர்மநபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
அருப்புக்கோட்டை,
அருப்புக்கோட்டை அருகே கோவில் உண்டியலை உடைத்து பணத்தை கொள்ளையடித்த மர்மநபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
உண்டியல் உடைப்பு
அருப்புக்கோட்டை அருகே ஜெயராம் நகரில் ஜெயசக்தி மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு ஜெயராம்நகர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் சாமி தரிசனம் செய்ய வருவது வழக்கம். அவ்வாறு கோவிலுக்கு வரும் பக்தர்கள் காணிக்கை செலுத்துவதற்காக கோவில் வெளியே உண்டியல் வைக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் வழக்கம் போல் கோவிலை பூட்டி சென்றனர். பின்னர் மறுநாள் காலையில் வந்து பார்த்த போது கோவில் உண்டியல் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு கோவில் தலைவர் பாலகுரு அதிர்ச்சி அடைந்தார்.
கண்காணிப்பு கேமரா
பின்னர் அவர் தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
அப்போது அங்கு பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராவை போலீசார் ஆய்வு செய்தனர். அதில் மர்மநபர் ஒருவர் உண்டியலை உடைத்து பணத்தை அள்ளி கொண்டு அங்கிருந்து சில வினாடிகளிலேயே மாயமானது பதிவாகி இருந்தது.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கோவில் உண்டியலை உடைத்து பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்மநபரை வலை வீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.