பெட்ரோல் பங்கில் பணம் திருட்டு
ஆலங்குளம் அருகே பெட்ரோல் பங்கில் பணம் திருடு போனது.
ஆலங்குளம்:
நெல்லை- தென்காசி சாலை முத்தன்குளம் விலக்கு அருகே பெட்ரோல் பங்க் ஒன்று உள்ளது. இங்கு மேலாளராக பணிபுரியும் சூரியகலா என்பவர் கடந்த 27-ந் தேதி காலை அலுவலகத்தில் உள்ள பணத்தை எடுத்து பார்த்துள்ளார். அப்போது அங்கு இருந்த ரூ.15 ஆயிரம் காணாமல் போனது தெரியவந்தது. இதுகுறித்து சூரியகலா, சீதபற்பநல்லூர் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அங்கிருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். அதில் முந்தைய நாள் நள்ளிரவில் ஒருவர் பெட்ரோல் போட வந்துள்ளார். அந்த நேரத்தில் பங்க் ஊழியர்கள் அனைவரும் தூங்கி கொண்டிருந்தும், அப்போது அலுவலக கதவு திறந்து இருந்ததை கண்ட அந்த நபர் உள்ளே சென்று அங்கிருந்த பணத்தை எடுத்துவிட்டு மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றதும் தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குபதிவு செய்து தப்பியோடிய மர்மநபரை தேடி வருகின்றனர்.