காஞ்சீபுரம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை-பணம் திருட்டு

காஞ்சீபுரம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை-பணம் திருடப்பட்டது.;

Update: 2022-11-29 11:08 GMT

நகை-பணம் திருட்டு

காஞ்சீபுரத்தை அடுத்த கோனேரிக்குப்பம் ஊராட்சிக்கு உட்பட்ட அண்ணா நகர் பாரதியார் தெருவை சேர்ந்தவர் இஸ்மாயில்(வயது 45). இவர் பெரிய காஞ்சீபுரம் பகுதியில் பிரியாணி கடை நடத்தி வருகிறார்.

இவரது மனைவிக்கு உடல்நிலை சரி இல்லாத காரணத்தால் கடந்த சில நாட்களாக உறவினர் வீட்டில் தங்கி இருந்தார்.

இந்த நிலையில் இஸ்மாயில் தனது வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 3 பவுன் தங்க நகை, ஒரு கிலோ வெள்ளி பொருட்கள், ரூ.30 ஆயிரம் போன்றவற்றை மர்மநபர்கள் திருடி சென்றுள்ளது தெரியவந்தது.

வலைவீச்சு

இது குறித்து உடனடியாக இஸ்மாயில் காஞ்சீபுரம் தாலுகா போலீசாருக்கு தகவல் அளித்தார். காஞ்சீபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு ஜூலியஸ் சீசர், காஞ்சீபுரம் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வீட்டை பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

தடவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்களை பதிவு செய்தனர். கிடைத்த ஆதாரங்களை சேகரித்து திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்