பூட்டிய வீட்டில் நகை, பணம் திருட்டு

சிவகிரியில் பட்டப்பகலில் பூட்டிய வீட்டில் நகை, பணம் திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்

Update: 2022-12-14 18:45 GMT

சிவகிரி:

சிவகிரி அண்ணா தெற்கு தெருவை சேர்ந்த வெள்ளைச்சாமி மனைவி ஜோதிலட்சுமி (வயது 62). இவர் நேற்று மதியம் தனது வீட்டை பூட்டி விட்டு வெளியே சென்றிருந்தார். அப்போது இதே தெருவை சேர்ந்த மாரியப்பன் மகன் இளவரசன் (21) அங்கு வந்து வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பீரோவில் இருந்த இரண்டு பவுன் தங்க சங்கிலி, அரை பவுன் மோதிரம், ரூ.4 ஆயிரம் ஆகியவற்றை திருடி சென்று விட்டார்.

ஜோதிலட்சுமி வீட்டிற்கு திரும்பி வந்து பார்த்தபோது நகை, பணம் திருடு போயிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து சிவகிரி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் சஞ்சீவ் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டார். இந்த திருட்டு தொடர்பாக இளவரசனை கைது செய்து, வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Tags:    

மேலும் செய்திகள்