விழுப்புரம் அருகேவீடு புகுந்து நகை, பணம் திருட்டு

விழுப்புரம் அருகே வீடு புகுந்து நகை, பணத்தை மா்மநபர்கள் திருடி சென்றுவிட்டனா்.

Update: 2023-07-15 18:45 GMT


செஞ்சி, 

விழுப்புரம் அருகே உள்ள ஏழுசெம்பொன் கிராமத்தை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன். இவரது மனைவி ராணி (வயது 51). இவர் நேற்று முன்தினம் காலை வீட்டை பூட்டி விட்டு அதே ஊரில் உள்ள ரைஸ் மில்லுக்கு சென்றார்.

சிறிது நேரத்துக்கு பின்னர், வந்து பார்த்தபோது வீட்டுக்கு வெளியே வைத்திருந்த சாவியை யாரோ மர்ம நபர்கள் எடுத்து வீட்டைத் திறந்து, பீரோவில் இருந்த 5 பவுன் நகை, ரூ.54 ஆயிரத்தை திருடி சென்றுவிட்டனர். இது குறித்து ராணி கஞ்சனூர் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்