விவசாயி வீட்டில் நகை- பணம் திருட்டு
மூன்றடைப்பு அருகே விவசாயி வீட்டில் நகை- பணம் திருடிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
நாங்குநேரி:
மூன்றடைப்பு கோவைகுளம் வடக்குத் தெருவை சேர்ந்தவர் சுப்பையா (வயது 41). விவசாயி. இவர் நேற்று மதியம் நெல்லைக்கு சென்றார். அவரது மனைவி வீட்டின் முன் பக்க கதவை பூட்டி விட்டு, பக்கத்து வீட்டுக்கு சென்று விட்டார். இதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் வீட்டுக்குள் புகுந்து, பீரோவில் இருந்த வளையல், சங்கிலி 16 பவுன் தங்க நகைகளையும், செல்போனையும் திருடிச் சென்று விட்டனர். வீட்டிற்கு திரும்பி வந்த கிருஷ்ணவேணி நகைகள் திருடப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுபற்றி மூன்றடைப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி களக்காடு அருகில் உள்ள ஜே.ஜே.நகரைச் சேர்ந்த கருப்பசாமி மகன் கசமுத்து, மகள் சாந்தி (50), குமரேசன் மகன் துரை (45) மற்றும் சிறுவன் உள்பட 4 பேரை கைது செய்தார்.