வீட்டின் பூட்டை உடைத்து நகை- பணம் திருட்டு

வீட்டின் பூட்டை உடைத்து நகை- பணத்தை மர்ம நபர்கள் திருடிச்சென்று விட்டனர்.

Update: 2022-11-01 17:29 GMT

வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டாவை அடுத்த கட்டுப்புடி சாரதி பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் மனோகரன் (வயது 65). தனியார் பள்ளியில் பஸ் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி ஆதிலட்சுமி ஆம்பூரில் உள்ள ஒரு தனியார் ஷூ தொழிற்சாலையில் வேலை பார்த்து வருகிறார். மகன் மோகன்ராஜ் (32) கரடிகுடி பகுதியில் செல்போன் கடை நடத்தி வருகிறார்.

இந்த நிலையில் 3 பேரும் வீட்டை பூட்டிக்கொண்டு வேலைக்கு சென்று உள்ளனர். மாலையில் மோகன்ராஜ் வீட்டுக்கு வந்தபோது வீட்டின் முன் பக்க இரும்பு கதவின்ப பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது வீட்டின் அறையில் இருந்த இரண்டு பீரோக்களும் உடைக்கப்பட்டு இருந்தது.

இதுபற்றி தகவல் அறிந்ததும் ஆதிலட்சுமி வீட்டுக்கு வந்து பார்த்தபோது பீரோவில் வைத்திருந்த 3½ பவுன் நகை மற்றும் ரூ.1½ லட்சம் திருடுப்போய் இருப்பது தெரியவந்தது.

இது குறித்து மனோகரன் பள்ளிகொண்டா போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் கருணாகரன், சப்- இன்ஸ்பெக்டர் ராஜகுமாரி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும் கைரேகை நிபுணரை வரவழைத்து கைரேகைகளை பதிவு செய்தனர்.

மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்