பிரம்மா கோவிலில் பொருட்கள் திருட்டு

பிரம்மா கோவிலில் பொருட்கள் திருட்டு நடைபெற்றது.

Update: 2022-11-10 18:54 GMT

அறந்தாங்கி அருகே விஜயபுரம் தெற்கு பகுதி பெரியகுளத்து கரையில் பிரம்மா கோவில் உள்ளது. இக்கோவிலின் கதவின் பூட்டு உடைக்கப்பட்டு கிடப்பதை அப்பகுதி பொதுமக்கள் பார்த்து நாகுடி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தியதில் கோவிலில் இருந்த குத்துவிளக்கு, மணி, தாம்பூலம் உள்ளிட்ட பொருட்கள் மற்றும் உண்டியலை உடைத்து அதில் இருந்த பணத்தையும் மர்மநபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து நாகுடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்