சிற்ப கலைக்கூடத்தில் சிலைகள் திருட்டு

ஸ்ரீவில்லிபுத்தூரில் சிற்ப கலைக்கூடத்தில் சிலைகளை திருடி சென்றனர்.

Update: 2023-05-14 19:01 GMT

ஸ்ரீவில்லிபுத்தூர்,

ஸ்ரீவில்லிபுத்தூர் மதுரை ரோட்டில் பூவாணி அருகே சிற்பக்கலைக்கூடம் உள்ளது. இங்கு கல் சிலைகள் வடிவமைக்கப்படுகிறது. பெருமாள் என்பவர் இந்த சிலைகளை செய்து வருகிறார். தனது சிற்பக் கலைக்கூடத்தில் இருந்த விநாயகர், சிங்கம், துளசி மாடம் ஆகிய கற்சிலைகளை தயார் செய்து விற்பனைக்காக வைத்திருந்தார். இந்தநிலையில் தனது சிற்பக் கலைக்கூடத்தில் இருந்த விநாயகர், சிங்கம், துளசி மாடம் ஆகிய சிலைகளை திருடி சென்று விட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்