கருங்கல்:
கருங்கல் அருகே உள்ள விழுந்தையம்பலம் பாலக்காவிளையை சேர்ந்தவர் விஜயன். இவருடைய மனைவி சாந்தி (வயது 50). சம்பவத்தன்று இவர் தனது மகள் ஜென்சியின் குழந்தையான அக்சிதாவுடன் கருங்கல் பஸ்நிலையத்துக்கு வந்தார். பின்னர், குழந்தையுடன் பஸ்சில் ஏறியுள்ளார். அப்போது, குழந்தையின் காலில் கிடந்த தங்க கொலுசு மாயமாகி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். கூட்டநெரிசலை பயன்படுத்தி யாரோ மர்ம நபர் தங்க கொலுசை திருடிச் சென்றது ெதரியவந்தது. பின்னர், இதுகுறித்து சாந்தி கருங்கல் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தங்க கொலுசை திருடிச் சென்ற மர்ம நபரை தேடி வருகிறார்கள்.