வீட்டின் ஜன்னல் கம்பியை உடைத்து எலக்ட்ரானிக் பொருட்கள் திருட்டு

வீட்டின் ஜன்னல் கம்பியை உடைத்து எலக்ட்ரானிக் பொருட்களை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

Update: 2023-10-07 21:53 GMT

திங்கள்சந்தை:

மேல இரணியல் கோணம் பகுதியை சேர்ந்தவர் முருகன். இவருடைய மகன் அனிகுமார். முருகனுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் கேரளாவில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இதனால் அவருடைய வீட்டை உறவினர் சாரதா என்பவர் பராமரித்து வருகிறார். சம்பவத்தன்று இரவு மர்ம நபர்கள் வீட்டின் படுக்கை அறை ஜன்னல் கம்பிகளை உடைத்து உள்ளே புகுந்து அங்கிருந்த செல்போன், சார்ஜர், ஏர்போட் மற்றும் கண்காணிப்பு கேமராவின் பொருட்கள் உள்ளிட்ட எலக்ட்ரானிக்ஸ் பொருட்களை திருடிச் சென்றனர். இதுகுறித்து இரணியல் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்