தோட்டங்களில் மின் மோட்டார்கள் திருட்டு
நெல்லை அருகே தோட்டங்களில் மின் மோட்டார்கள் திருடப்பட்டது.
நெல்லை அருகே டக்கரம்மாள்புரம் பகுதியை சேர்ந்தவர் யோவான் (வயது 65). அந்த பகுதியில் இவருக்கு சொந்தமான தோட்டம் அமைந்துள்ளது. அருகில் ஞானமுத்து மற்றும் சிம்சன் ஆகியோரது தோட்டங்களும் உள்ளன.
சம்பவத்தன்று இவர்களது தோட்டத்தில் புகுந்த மர்ம நபர்கள் மின் மோட்டார்கள் மற்றும் ஒயர்களை திருடிச்சென்று விட்டனர். அவற்றின் மதிப்பு ரூ.2 லட்சம் ஆகும்.
இதுகுறித்து 3 பேரும் முன்னீர்பள்ளம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை தேடி வருகின்றனர்.