திருமங்கலம்
திருமங்கலம் அருகே உள்ள அழகுசிறை கிராமத்தைச் சேர்ந்தவர் சேது (வயது 65). விவசாயி. தற்போது திருமங்கலம் ராஜாஜி தெருவில் பருத்தி கடை நடத்தி வருகிறார். இவருடைய விவசாய தோட்டம் அழகுசிறை கிராமத்தில் உள்ளது. தோட்டத்தில் பம்ப்செட் பராமரிப்பு பணி தற்போது நடைபெற்று வருகிறது. இதனால் 2 மின்சார மோட்டார்களையும் கழற்றி வைத்திருந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் தோட்டத்திற்கு சென்று பார்த்த போது 2 மின்சார மோட்டார்களை காணவில்லை. அதிர்ச்சி அடைந்த சேது பல இடங்களிலும் தேடிப் பார்த்தார். கிடைக்கவில்லை. இதனைத் தொடர்ந்து திருமங்கலம் டவுன் போலீசில் புகார் கொடுத்தார்.போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.