மின்மோட்டார்கள் திருட்டு

பட்டிவீரன்பட்டி அருகே, விவசாய தோட்டங்களில் மின்மோட்டார்களை திருடிய மர்ம நபர்களை போலீசார் விலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2023-02-18 16:04 GMT

பட்டிவீரன்பட்டி அருகே உள்ள எம்.வாடிப்பட்டி மருதாநதி அணை கரையோர பகுதியில் விவசாய தோட்டங்கள் உள்ளன. இங்கு தென்னை மரங்களை வைத்து விவசாயிகள் பராமரித்து வருகின்றனர். இதேபோல் சில விவசாயிகள், நெல் பயிரிட்டுள்ளனர். தண்ணீர் பாய்ச்சுவதற்காக, தோட்டத்து கிணறுகளில் மின்மோட்டார்கள் பொருத்தப்பட்டுள்ளன.

இந்தநிலையில் எம்.வாடிப்பட்டியை சேர்ந்த விவசாயிகள் செல்லப்பாண்டி, செந்தில்பாண்டி ஆகியோரின் தோட்டங்களில் இருந்து 2 மின்மோட்டார்களை மர்ம நபர்கள் திருடி சென்று விட்டனர். இதேபோல் விவசாயி குட்டிபாண்டி என்பவரின் தோட்டத்தில் இருந்து ரூ.50 ஆயிரம் மதிப்பிலான காப்பர் வயர்களை நேற்று முன்தினம் நள்ளிரவு நேரத்தில் மர்ம நபர்கள் திருடி சென்றுவிட்டனர்.

நேற்று காலை தோட்டங்களுக்கு சென்ற விவசாயிகள், மோட்டார் மற்றும் வயர்களை காணாமல் போனதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். மேலும் இதுகுறித்து பட்டிவீரன்பட்டி போலீஸ் நிலையத்தில் 3 விவசாயிகளும் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்