மின்மாற்றியில் ரூ.2 லட்சம் மதிப்புள்ள காப்பர் காயில் திருட்டு

கறம்பக்குடி அருகே மின்மாற்றியில் ரூ.2 லட்சம் மதிப்புள்ள காப்பர் காயில் திருட்டு போனது.

Update: 2022-09-23 19:03 GMT

கறம்பக்குடி அருகே உள்ள ரெகுநாதபுரம் துணை மின்நிலையத்துக்குட்பட்ட விளாரிப்பட்டி கிராமத்தில் மின்மாற்றி உள்ளது. இந்த மின்மாற்றியில் இருந்து மின்வினியோகம் செய்யப்படும் பகுதிகளில் நேற்று மின்தடை ஏற்பட்டிருந்தது. இதையடுத்து மின்மாற்றியில் பழுது உள்ளதா? என பார்பதற்காக மின்வாரிய ஊழியர்கள் சென்றனர். அங்கு மின்மாற்றியின் மேல் பகுதி கழட்டப்பட்டு உள்ளே இருந்த 8 காப்பர் காயில் உருளைகள் திருடப்பட்டிருந்தன. இதன் மதிப்பு ரூ.2 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது. இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் மின்வாரிய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, ரெகுநாதபுரம் மின்வாரிய உதவி பொறியாளர் முத்து, கறம்பக்குடி போலீசில் புகார் கொடுத்தார். இதன்பேரில் கறம்பக்குடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்