கடையில் பித்தளை பாத்திரங்கள் திருட்டு
ஆற்றூா் அருகே கடையில் பித்தளை பாத்திரங்களை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
திருவட்டார்:
ஆற்றூா் அருகே கடையில் பித்தளை பாத்திரங்களை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
பாத்திக்கடையில் திருட்டு
ஆற்றூர் அருகே உள்ள கல்லுப்பாலம் பகுதியை சேர்ந்தவர் ஜெயக்குமார் (வயது 47). இவர் அந்த பகுதியில் திருமணம் உள்ளிட்ட விழாக்களுக்கு வாடகைக்கு விடும் பாத்திரக்கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் கடையை பூட்டி விட்டு ஜெயக்குமார் வீட்டுக்கு சென்றார்.
இந்தநிலையில் நேற்று காலையில் ஜெயக்குமார் கடையை திறக்க வந்தார். அப்போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது அங்கு வைத்திருந்த 60 கிலோ எடையிலான 2 பித்தளை பாத்திரம், 2 பெரிய பித்தளை உருளி ஆகியவை திருட்டு போயிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
கேமரா காட்சிகள்
இதுகுறித்து ஜெயக்குமார் திருவட்டார் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் நள்ளிரவில் டெம்போவில் 2 மர்ம நபர்கள் அந்த பகுதியை சுற்றி வருவதும், பின்னர் கடையில் இருந்து பித்தளை பாத்திரங்களை திருடிச் செல்வதும் பதிவாகி இருந்தது. அந்த காட்சிகளை போலீசார் கைப்பற்றி திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்ளை தேடி வருகிறார்கள்.
கடந்த 21-ந்தேதி அந்த பகுதியில் உள்ள மகாதேவர் கோவிலில் பித்தளையிலான மணிகள், விளக்குகளும், உண்ணாமலைக்கடை பகுதியில் பாத்திரக்கடையில் பித்தளை பாத்திரங்கள் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடிச் சென்றது குறிப்பிடத்தக்கது.