சூளகிரி அருகே கோவில் பூட்டை உடைத்து உண்டியல் பணம் திருட்டு

சூளகிரி அருகே கோவில் பூட்டை உடைத்து உண்டியல் பணம் திருட்டு போனது.

Update: 2022-06-08 17:43 GMT

சூளகிரி:

சூளகிரி அருகே அட்டகுறுக்கி கிராமத்தில் மலை மீது, முருகன் கோவில் உள்ளது. இந்த கோவிலில், நேற்று முன்தினம் இரவு மர்மநபர்கள் உள்ளே புகுந்து உண்டியலை உடைத்து அதில் இருந்த பணத்தை திருடினர். பின்னர், உண்டியலை கோவில் அருகில் அந்த நபர்கள் வீசி சென்றுள்ளனர். இந்த திருட்டு சம்பவம் குறித்து கிராம மக்கள் சூளகிரி போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் விரைந்து சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். இந்த திருட்டு சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். கோவில் உண்டியலில் ரூ.80 ஆயிரம் இருந்ததாக பொதுமக்கள் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்