பொக்லைன் எந்திரத்தில் பேட்டரி திருட்டு

சிதம்பரத்தில் பொக்லைன் எந்திரத்தில் உள்ள பேட்டரியை மா்ம நபர்கள் திருடிச் சென்றுவிட்டனர்.

Update: 2022-09-16 18:42 GMT

சிதம்பரம், 

சிதம்பரம் குமரன்குளம் தூர்வாரும் பணி கடந்த சில நாட்களாக நடந்து வந்தது. இந்த பணியில் சிதம்பரம் அருகே உள்ள மேலமணக்குடி கிராமத்தை சேர்ந்த விவேக் (வயது 28) என்பவர் பொக்லைன் எந்திரம் மூலம் தூர்வாரும் பணியில் ஈடுபட்டார். நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்து பொக்லைன் எந்திரத்தை குமரன்குளம் பகுதியில் நிறுத்தி விட்டு வீட்டிற்கு சென்று விட்டார். இந்நிலையில் நேற்று காலை அவர் வந்து பார்த்த போது, பொக்லைன் எந்திரத்தில் இருந்த ரூ.25 ஆயிரம் மதிப்பிலான பேட்டரியை காணவில்லை. அதை மர்ம நபர்கள் திருடிச்சென்று விட்டது தெரிந்தது. இது குறித்து விவேக் சிதம்பரம் நகர போலீசில் புகார் செய்தார்.அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, பேட்டரியை திருடிச்சென்ற மர்ம நபரை தேடி வருகின்றனர். இதேபோல் கடந்த சில நாட்களாக சிதம்பரம் நகர பகுதிகளில் லாரி உள்ளிட்ட வாகனங்களில் பேட்டரியை மர்ம நபர்கள் திருடி சென்று வருகின்றனர். இதை போலீசார் தடுத்து, நிறுத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்