கிறிஸ்தவ ஆலயத்தில் உண்டியல் பணம், மின் சாதனங்கள் திருட்டு

கிறிஸ்தவ ஆலயத்தில் உண்டியல் பணம், மின் சாதனங்கள் திருட்டு

Update: 2022-10-19 20:53 GMT

கன்னியாகுமரி:

கன்னியாகுமரி அருகே சுவாமிநாதபுரத்தில் ஒரு கிறிஸ்தவ ஆலயம் உள்ளது. நேற்று முன்தினம் இரவு பிரார்த்தனை முடிந்ததும் நிர்வாகிகள் ஆலயத்தை பூட்டி சென்றனர். நேற்று காலையில் ஆலயத்தை திறக்க வந்த போது அங்கு கதவுகள் உடைக்கப்பட்டு இருந்ததை பார்த்து அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

உடனே பதற்றத்துடன் உள்ளே சென்று பார்த்த போது கண்காணிப்பு கேமராவின் மானிட்டர், உண்டியல் பணம், கியாஸ் அடுப்பு, சிலிண்டர் உள்ளிட்ட பொருட்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.

இதுதொடர்பாக கன்னியாகுமரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் லிபி பால்ராஜ் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரித்தனர். மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை தேடிவருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்