பெண்ணிடம் 3 பவுன் சங்கிலி அபேஸ்

தக்கலை பஸ் நிலையத்தில் பஸ்சில் ஏறும் போது பெண்ணிடம் 3 பவுன் சங்கிலியை அபேஸ் செய்த மர்ம ஆசாமிகளை போலீசார் தேடி வருகிறார்கள்.

Update: 2022-06-24 19:48 GMT

தக்கலை:

தக்கலை பஸ் நிலையத்தில் பஸ்சில் ஏறும் போது பெண்ணிடம் 3 பவுன் சங்கிலியை அபேஸ் செய்த மர்ம ஆசாமிகளை போலீசார் தேடி வருகிறார்கள்.

இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறியதாவது:-

3 பவுன் சங்கிலி அபேஸ்

தக்கலை அருகே உள்ள திருவிதாங்கோடு அமராவதி பகுதியை சேர்ந்தவர் சார்லி (வயது 60). இவர் நேற்று முத்தலக்குறிச்சியில் உள்ள மகளை பார்த்துவிட்டு தக்கலை பஸ் நிலையம் வந்தார்.

அங்கிருந்து வீட்டுக்கு செல்வதற்காக மாலையில் மார்த்தாண்டம் செல்லும் பஸ்சில் சார்லி ஏறி இருக்கையில் உட்கார்ந்தார். பஸ்சில் கூட்டம் அதிகமாக இருந்ததால் சார்லி கழுத்தில் கிடந்த 3 பவுன் தங்கசங்கிலியை காணவில்லை. அதை மர்ம ஆசாமிகள் அபேஸ் செய்து விட்டனர். இதனால் பதறிப்போன அவர் தங்க சங்கிலியை காணவில்லை என்று கூச்சல் போட்டார்.

பயணிகளிடம் சோதனை

உடனே பயணிகள் யாரும் கீழே இறங்க கூடாது என கூறிய கண்டக்டர், பஸ்சை, தக்கலை போலீஸ் நிலையத்துக்கு கொண்டு செல்லுமாறு கூறினார்.

அதன்படி பஸ் தக்கலை போலீஸ் நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு இருந்த போலீசார் பயணிகளிடம் சோதனை போட்டனர். ஆனால் நகை எதுவும் சிக்காததால் பயணிகளோடு பஸ்சை அனுப்பி வைத்தனர். பஸ் நிலையத்தில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து, தங்க சங்கிலியை அபேஸ் செய்து சென்ற மர்ம ஆசாமிகளை தேடி வருகிறார்கள். 

Tags:    

மேலும் செய்திகள்