பட்டாசு ஆலைக்கு சொந்தமான பஸ் திருட்டு

பட்டாசு ஆலைக்கு சொந்தமான பஸ் திருட்டு போனது.

Update: 2023-01-27 19:33 GMT

சிவகாசி, 

சிவகாசியில் உள்ள ஒரு பட்டாசு ஆலைக்கு சொந்தமான பஸ்சை அந்த ஆலையில் பணியாற்றி வரும் டிரைவர் சிவகாசி- சாத்தூர் ரோட்டில் உள்ள ஒரு பெட்ரோல் பங்கில் நிறுத்தி விட்டு செல்வது வழக்கம். இந்த நிலையில் சம்பவத்தன்று மாலையில் பட்டாசு ஆலை ஊழியர் பஸ்சை பெட்ரோல் பங்கில் நிறுத்திவிட்டு சென்றுவிட்டார். பின்னர் மறுநாள் காலையில் வந்து பார்த்தபோது பஸ்சை காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த ஆலை நிர்வாகத்தினர் பெட்ரோல் பங்கில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்து பார்த்தபோது ஒரு நபர் அந்த பஸ்சை திருடி சென்றது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து ஆலையின் மேலாளர் கோனேஸ்வரன் சிவகாசி கிழக்கு காவல் நிலையத்தில் புகார் செய்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் மாயமான பஸ் விருதுநகரை கடந்து சென்றது தெரியவந்துள்ளது. சிவகாசி பகுதியில் கடந்த சில வாரங்களாக குற்ற சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் மாவட்ட போலீஸ் நிர்வாகம் சிவகாசி உட்கோட்ட போலீஸ் அதிகாரிகளுக்கு உரிய அறிவுறுத்தல் வழங்கி குற்றச் சம்பவங்களை தடுக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். சிவகாசி பகுதியில் பூட்டி கிடக்கும் சோதனை சாவடிகளை திறந்து செயல்பட தேவையான நடவடிக்கைகளை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாச பெருமாள் எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Tags:    

மேலும் செய்திகள்