குழந்தை மற்றும் பெண்களிடம் 9 பவுன் நகைகள் திருட்டு

கண்டாச்சிபுரத்தில் நடைபெற்ற கும்பாபிஷேகத்தில் குழந்தை மற்றும் பெண்களிடம் 9 பவுன் நகைகள் திருட்டு போலீசார் தீவிர விசாரணை

Update: 2023-07-02 18:45 GMT

திருக்கோவிலூர்

திருக்கோவிலூர் அருகே உள்ள கண்டாச்சிபுரம் மடவிளாகம் பகுதியில் உள்ள ராமநாதீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் கடந்த 29-ந் தேதி நடைபெற்றது. இதில் கண்டாச்சிபுரம் மற்றும் சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர். இதில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி கண்டாச்சிபுரம் ஈஸ்வரன் கோவில் தெருவை சேர்ந்த தண்டபாணி(வயது 62) என்பவரின் அண்ணி கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் தங்க சங்கிலி, அடுக்கம் கிராமத்தை சேர்ந்த தேவநாதனின் 5 வயது பெண் குழந்தை தனிஷ்காவின் கழுத்தில் கிடந்த ஒரு பவுன் சங்கிலி, கண்டாச்சிபுரம் பகுதியை சேர்ந்த குப்புசாமி மனைவி மீரா(40) என்பவரின் கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் சங்கிலியை யாரோ மர்ம நபர்கள் திருடிசென்று விட்டனர். மேலும் சில குழந்தைகளின் காலில் அணிவித்திருந்த கொலுசுகளும் திருடு போய் இருப்பதாக கூறப்படுகிறது. திருட்டு போன நகைகளின் மதிப்பு ரூ.3¾ லட்சம் இருக்கும் எனதெரிகிறது. இந்த 3 திருட்டு சம்பவங்கள் தொடர்பாக கண்டாச்சிபுரம் போலீசார் தனித்தனியாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கும்பாபிஷேக விழாவில் சுமார் 20 ஆயிரத்துக்கும் அதிகமான பக்தர்கள் கலந்து கொண்டதாகவும், ஆனால் அதற்கேற்ப பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யாததே இந்த திருட்டு சம்பவத்துக்கு காரணம் என பக்தர்கள் புகார் தெரிவித்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்