வீட்டின் கதவை உடைத்து 9½ பவுன் நகை திருட்டு
வீட்டின் கதவை உடைத்து 9½ பவுன் நகை திருட்டுப்போனது
மதுரை பீ.பி.குளம் ராதாகிருஷ்ணன் ரோடு உழவர் சந்தை பகுதியில் வசிப்பவர் ரோஷன்பானு (வயது 23). சம்பவத்தன்று இவர் வீட்டை பூட்டி விட்டு உறவினர் வீட்டிற்கு சென்றார். பின்னர் திரும்பி வந்த போது வீட்டின் கதவு திறந்து கிடந்தது. மேலும் பீரோவில் வைத்திருந்த 9½ பவுன் நகைகள், 10 ஆயிரம் ரூபாய் ஆகியவை திருடப்பட்டது தெரியவந்தது. இது குறித்து அவர் தல்லாகுளம் போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்