பொன்னேரியில் வீட்டின் பூட்டை உடைத்து 8 பவுன் நகை திருட்டு

பொன்னேரியில் வீட்டின் பூட்டை உடைத்து 8 பவுன் நகையை திருடி சென்றவரை போலீசார் தேடி வருகின்றனர்.

Update: 2023-01-19 09:52 GMT

பொன்னேரி நகராட்சியில் உள்ள சின்னவேண்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 38). இவர் அருகே உள்ள பள்ளி ஒன்றில் இந்தி ஆசிரியராக வேலை செய்து வருகிறார். இவருக்கு சொந்தமான வீட்டின் ஒரு பகுதியில் வெங்கடேசனும் மற்றொரு பகுதியில் தனியார் நிறுவன ஊழியர் விஜய்பாபு (35) என்பவரும் வசித்து வருகின்றனர். இவர்கள் பொங்கல் விடுமுறையையொட்டி வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் வெளியே சென்று விட்டனர்.

இந்த நிலையில் நேற்று வெங்கடேசன் வீட்டுக்கு வந்தார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது அரை கிலோ வெள்ளி பெருட்கள் திருடு போனது தெரியவந்தது. பின்னர் இதுகுறித்து வாடகைதாரர் விஜய்பாபுவிற்கு தகவல் கொடுத்தனர். அவரும் வீட்டிற்கு வந்து பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்து 8 பவுன் தங்க நகைகள் திருடு போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் பொன்னேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து திருட்டில் ஈடுபட்டவர்களை தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்