பெண் வீட்டில் 5½ பவுன் நகை திருட்டு

ஆனைமலை அருகே பெண் வீட்டில் 5½ பவுன் நகை திருட்டு போனது.;

Update: 2023-07-13 18:45 GMT

ஆனைமலை,

ஆனைமலை அருகே உள்ள தேவிபட்டணம் விநாயகர் கோவில் வீதியை சேர்ந்தவர் பாஞ்சாலி (வயது 50). அந்த பகுதியில் உள்ள மில்லில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவர் கணவரை பிரிந்து தனியாக வசித்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் இரவு வீட்டை பூட்டிவிட்டு வேலைக்கு சென்றார். பின்னர் வேலை முடிந்து நேற்று காலை வீட்டிற்கு வந்தபோது, கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது.

இ தனால் அதிர்ச்சியடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தபோது, மேஜை டிராயரில் வைத்திருந்த 5½ பவுன் தங்க நகை திருட்டு போயிருந்தது. இதுகுறித்த புகாரின் பேரில், ஆனைமலை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்