சுங்கத்துறை அதிகாரி வீட்டில் 5 பவுன் நகை-பணம் திருட்டு

சுங்கத்துறை அதிகாரி வீட்டில் 5 பவுன் நகை-பணம் திருட்டுபோனது.

Update: 2022-09-29 22:29 GMT

துறையூர்:

திருச்சி மாவட்டம், துறையூர் விரிவாக்கம் பகுதியை சேர்ந்தவர் தசரதன். இவர் சென்னையில் சுங்கத்துறை இணை இயக்குனராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி ராஜலட்சுமி(வயது 48). இவர்களது மகள் காயத்ரி. தசரதன் சென்னையில் தங்கி பணிபுரிவதால், ராஜலட்சுமி தனது மகளுடன் துறையூரில் உள்ள வீட்டில் வசித்து வருகிறார். கடந்த வாரம் வீட்டை பூட்டிவிட்டு மகளுடன் ராஜலட்சுமி சென்னை சென்றார்.

இந்த நிலையில் கடந்த 21-ந் தேதி அவரது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை கண்ட எதிர் வீட்டுக்காரர், அது பற்றி ராஜலட்சுமிக்கு தேதி தகவல் அளித்தார். இது குறித்து ராஜலட்சுமி துறையூரில் உள்ள தனது சகோதரர் ஸ்டாலினுக்கும், உறவினர்களுக்கும் தகவல் அளித்தார். அவர்கள் நேரில் வீட்டிற்கு சென்று பார்த்துவிட்டு, துறையூர் போலீசில் புகார் அளித்தனர்.

வீட்டில் தோடு, சங்கிலி, மோதிரம் உள்ளிட்ட 5 பவுன் நகைகளையும், ரூ.30 ஆயிரத்தையும் வைத்துவிட்டு ராஜலட்சுமி சென்னை சென்றதாக கூறப்படுகிறது. அந்த நகைகள் திருட்டு போனதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதன்பேரில் துறையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகைகளை திருடிச்சென்ற மர்ம நபர்களை தேடி வருகிறார்கள். சுங்கத்துறை அதிகாரி வீட்டில் நடந்த இந்த திருட்டு சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்