3 ஆயிரம் கிலோ இரும்பு பொருட்கள் திருட்டு
மதுரையில் குடோனில் வைத்திருந்த 3 ஆயிரம் கிலோ இரும்பு பொருட்கள் திருட்டு போனது.;
மதுரை அழகப்பன்நகர் திருநாவுக்கரசர் தெருவை சேர்ந்தவர் சூரியகுமார் (வயது 42). இவர் பழைய இரும்பு பொருட்களை வாங்கி விற்பனை செய்து வருகிறார். அதற்காக ஜீவா நகர் விரிவாக்க பகுதியில் குடோன் வைத்துள்ளார். அங்கு பழைய இரும்பு பொருட்கள் சாக்கு மூடையில் கட்டி வைக்கப்பட்டிருந்தது. சம்பவத்தன்று அந்த குடோனின் கதவு உடைக்கப்பட்டிருந்தது. மேலும் அங்கிருந்த 3 ஆயிரம் கிலோ எடையுள்ள இரும்பு பொருட்கள் திருடப்பட்டது தெரியவந்தது. இது குறித்து அவர் போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் ஜெய்ஹிந்த்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.