பேட்டை:
நெல்லை பேட்டை நரிக்குறவர் காலனியை சேர்ந்தவர் பொன்ராஜ் மகன் விக்ரம் (வயது 38). இவர் நேற்று முன்தினம் இரவு தனது 2 மோட்டார்சைக்கிள்களை வீட்டு முன் நிறுத்திவிட்டு அதிகாலை எழுந்து பார்த்த பொழுது அது திருட்டுபோனது தெரியவந்தது.
இதே போல் அதே பகுதியைச் சேர்ந்த சுதாகர் மகன் மணிகண்டன் (28) மோட்டார்சைக்கிளையும் மர்ம நபர்கள் திருடி சென்றனர். இதுகுறித்த புகாரின்பேரில் பேட்டை போலீசார் விசாரணை நடத்தி திருடர்களை தேடி வருகிறார்கள்.