வண்டலூரில் வீட்டின் பூட்டை உடைத்து 28 பவுன் நகை திருட்டு

வண்டலூரில் வீட்டின் பூட்டை உடைத்து 28 பவுன் நகை திருடப்பட்டது.;

Update: 2023-06-21 08:23 GMT

செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் ஊராட்சிக்குட்பட்ட வெங்கடேசபுரம் 4-வது தெருவை சேர்ந்தவர் கோகுல ராமன் (வயது 32), இவர் தனது வீட்டை பூட்டிவிட்டு தனது உறவினர் வீட்டிற்கு சென்றிருந்தார். பின்னர் வீடு திரும்பிய போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 28 பவுன் தங்க நகை திருட்டு போனது தெரிய வந்தது. இது குறித்து கோகுல ராமன் ஓட்டேரி போலீசில் புகார் செய்தார்.

போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அக்கம் பக்கத்தில் உள்ள நபர்களிடம் விசாரித்தனர். மேலும் வீட்டில் பதிவாகி இருந்த கைரேகைகளை பதிவு செய்தனர்.

இது குறித்து ஓட்டேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மேலும் அந்த பகுதியில் பதிவாகி இருந்த கண்காணிப்பு கேமரா காட்சியின் அடிப்படையில் வீட்டின் பூட்டை உடைத்து திருடிய நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்