23½ பவுன் நகைகள் திருட்டு

தஞ்சையில் வீட்டில் வைத்திருந்த பெட்டியை உடைத்து 23½ பவுன் நகைகளை திருடிய மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.

Update: 2023-10-05 19:41 GMT

தஞ்சையில் வீட்டில் வைத்திருந்த பெட்டியை உடைத்து 23½ பவுன் நகைகளை திருடிய மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.

23½ பவுன் நகைகள் திருட்டு

தஞ்சை கீழவாசல் சாமியாபிள்ளை தெரு பகுதியை சேர்ந்தவர் முகமது முஸ்தபா கமல் பாட்சா. வெளிநாட்டில் வேலை பார்த்த வந்த இவர் தற்போது இறந்துவிட்டார். இவரது மனைவி தாகிருநிசாபேகம்(வயது 58). இவர் வீட்டில் தனியாக வசித்து வருகிறார்.

சம்பவத்தன்று இவர் உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வீட்டை பூட்டிவிட்டு சென்றிருந்தார். பின்னர் வீட்டிற்கு வந்து பார்த்த போது பொருட்கள் மற்றும் துணிகள் சிதறி கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

பின்னர் கட்டிலுக்கு அருகே வைத்திருந்த பெட்டியை பார்த்த போது அது உடைக்கப்பட்டு அதில் இருந்த 23½ பவுன் நகைகளை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. திருட்டு போன நகைகளின் மதிப்பு ரூ. 10 லட்சத்து 50 ஆயிரம் என கூறப்படுகிறது.

மர்மநபர்களுக்கு வலைவீச்சு

இதுகுறித்து தஞ்சை கிழக்கு போலீஸ் நிலையத்தில் தாகிருநிசாபேகம் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் சுதா, சப்-இன்ஸ்பெக்டர் தென்னரசு மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தடயவியல் நிபுணர்கள் தடயங்களை சேகரித்தனர். நகைகளை திருடிய மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகி்ன்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்