2 மோட்டார் சைக்கிள்கள் திருட்டு
ராமநாதபுரத்தில் 2 மோட்டார் சைக்கிள்கள் திருடப்பட்டன.
ராமநாதபுரம்,
ராமநாதபுரம் புதிய பஸ்நிலையம் பின்புறம் வாகன நிறுத்துமிடம் உள்ளது. இங்கு நிறுத்தப்படும் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இங்கு நிறுத்தப்பட்டிருந்த 2 மோட்டார் சைக்கிள்களை யாரோ திருடிச்சென்று விட்டார்களாம். இதுகுறித்து அதன் மேற்பார்வையாளர் பட்டணம்காத்தான் ரிசிகேசவன் (வயது 68) என்பவர் அளித்த புகாரின் அடிப்படையில் ராமநாதபுரம் கேணிக்கரை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.