ஐ.டி. ஊழியர் வீட்டில் 17 பவுன் நகை திருட்டு

ஐ.டி. ஊழியர் வீட்டில் 17 பவுன் நகை திருட்டு

Update: 2022-09-05 16:22 GMT

சிங்காநல்லூர்

கோவை இருகூர் அருகே உள்ள சிவசக்தி நகரை சேர்ந்தவர் அருள் குமார்(வயது 32). சென்னையில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் அருள்குமார், கடந்த 10 மாதங்களாக வீட்டில் இருந்தபடியே வேலை பார்த்து வருகிறார். அவர் சம்பவத்தன்று தனது வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் வெள்ளலூரில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றார்.

இதை பயன்படுத்தி கொண்ட மர்ம ஆசாமிகள், அவரது வீட்டின் முன்பக்க கதவை உடைத்து உள்ளே நுழைந்தனர். பின்னர் பீரோவை திறந்து கம்மல், செயின், நாணயம், நெக்லஸ், வளையல் உள்பட 17 பவுன் தங்க நகைகள் மற்றும் 1 கிலோ வெள்ளி பொருட்களை திருடிவிட்டு தப்பி சென்றனர். இதுகுறித்து சிங்காநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்