பெண்ணிடம் 10 பவுன் நகை திருட்டு

தண்ணீர் கேட்பது போல நடித்து, பெண்ணிடம் 10 பவுன் நகை திருடிய மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

Update: 2022-09-11 16:47 GMT

பெரியகுளம் தென்கரையை சேர்ந்தவர் பொன்னுத்துரை (வயது 65). அவருடைய மனைவி சுப்புலட்சுமி (57). சம்பவத்தன்று இவர், வீட்டில் தனியாக இருந்தார். அப்போது அங்கு வந்த 35 வயது வாலிபர் ஒருவர், சுப்புலட்சுமியிடம் தண்ணீர் கேட்டார்.

இதனையடுத்து தண்ணீர் எடுத்து வருவதற்கு சுப்புலட்சுமி வீட்டுக்குள் சென்றார். அந்த சமயத்தில், சோபாவில் இருந்த 10 பவுன் தங்க நகைகளை அந்த நபர் திருடி சென்று விட்டார். தண்ணீர் கேட்பது போல நடித்து வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் நகை திருடிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து தென்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபரை வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்