தொழிலாளி வீட்டில் 10 பவுன் நகை திருட்டு

பாணாவரம் அருகே தொழிலாளி வீட்டில் 10 பவுன் நகையை மர்ம நபர்கள் திருடி சென்றுவிட்டனர்.

Update: 2023-09-22 12:35 GMT

பாணாவரம் அருகே கோவிந்தாங்கல் கிராமம் பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் கந்தவேல் (வயது 30), விவசாய கூலி தொழிலாளி. இவர் சம்பவத்தனறு இரவு காற்றுக்காக வீட்டின் முன்பக்க கதவை திறந்து வைத்துவிட்டு தூங்கி கொண்டிருந்தார். அப்போது மர்ம நபர்கள் வீட்டினுள் நுழைந்து அங்குள்ள அறையை திறந்து பீரோவை உடைத்து அதில் இருந்த 10 பவுன் நகைகளை திருடி சென்றுள்ளனர்.

அதிகாலையில் கந்தவேல் எழுந்தபோது பீரோ வைக்கப்பட்டிருந்த அறைக்கதவு திறக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னா் அறையின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த பொருட்கள் சிதறி கிடந்தது. மேலும் பீரோவில் வைக்கப்பட்டிருந்த 10 பவுன் நகை திருடப்பட்டிருந்தது தெரியவந்தது.

இதுகுறித்து பாணாவரம் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்