திருட்டு, கஞ்சா உள்ளிட்ட 12 வழக்குகளில் தலைமறைவாக இருந்த வாலிபர் கைது

திருட்டு, கஞ்சா விற்ற வழக்கு உள்ளிட்ட 12 வழக்குகளில் தலைமறைவாக இருந்த வாலிபரை, நீலகிரி போலீசார் ஆந்திரா மாநிலம் சென்று கைது செய்தனர்.

Update: 2023-07-17 18:45 GMT

ராஜசேகர்

ஊட்டி: திருட்டு, கஞ்சா விற்ற வழக்கு உள்ளிட்ட 12 வழக்குகளில் தலைமறைவாக இருந்த வாலிபரை, நீலகிரி போலீசார் ஆந்திரா மாநிலம் சென்று கைது செய்தனர்.

திருட்டு, கஞ்சா விற்ற வழக்கு

திண்டுக்கல் மாவட்டம் சீதப்பாடி அடுத்த மல்லுச்சாமி என்பவரது மகன் ராஜசேகர்(வயது 31). இவர், கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் நீலகிரி மாவட்டம் ஊட்டி ஸ்டேன்ஸ் சந்திப்பு பகுதியில் உள்ள ஒரு ஓட்டல் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தை திருடிச் சென்றார்.

இதுகுறித்த புகாரின்பேரில் ஊட்டி நகர மத்திய போலீசார் வழக்குப்பதிவு செய்து கண்காணிப்பு கேமரா பதிவுகள் அடிப்படையில் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது ராஜசேகர் என்பதை உறுதி செய்தனர். இதைதொடர்ந்து அவரை கைது செய்து விசாரணை நடத்தி ஊட்டி சிறையில் அடைத்தனர்.

கைது

இதன்பின்னர் ஜாமீனில் வெளியே வந்த ராஜசேகர் மீண்டும் விசாரணைக்கு கோர்ட்டில் ஆஜாராகாமல் தப்பி சென்று தலைமறைவாகி விட்டார். இந்த நிலையில் விசாரணையில் அவர், ஆந்திர மாநிலம் ஐதராபாத் அருகே உள்ள ராஜமுந்திரி பகுதிக்கு தப்பி சென்று அங்கு நண்பர் ஒருவரின் வீட்டில் தங்கி இருந்து தொழிலாளியாக பணியாற்றி வந்தது தெரியவந்தது.மேலும் அவர் மீது ஊட்டி, திருப்பூர், கருமத்தம்பட்டி, திண்டுக்கல், வீரபாண்டி உள்ளிட்ட போலீஸ் நிலையங்களில் திருட்டு, வழிப்பறி, கஞ்சா விற்றது உள்ளிட்ட 12 வழக்குகள் நிலுவையில் உள்ளது தெரியவந்தது.

இந்த நிலையில் நீலகிரி போலீஸ் சூப்பிரண்டு பிரபாகர் உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர் முரளிதரன் அறிவுறுத்தலின்படி, சப்- இன்ஸ்பெக்டர் வனக்குமார், ஜெயக்குமார், சுதாகர் உள்ளிட்ட போலீசார் நேற்றுமுன்தினம் ஆந்திர மாநிலம் ராஜமுந்திரி சென்று அங்கு தலை்மறைவாக இருந்த ராஜசேகரை கைது செய்து ஊட்டிக்கு அழைத்து வந்தனர். பின்னர் அவரை, ஊட்டி கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்